[X] Close

விஜய் அரசியலுக்கு வருவார் – ராதாரவி உறுதி


vijay-radharavi

நடிகர் ராதாரவி

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 19:30 pm
  • அ+ அ-

நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார். நாட்டுக்கு நன்மை செய்பவராக இருப்பார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

நடிகர் ராதாரவி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

விஜய்யை அவருடைய முதல் படத்திலிருந்தே தெரியும். இன்று வரை அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நடிகர் விஜய்யிடம் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார்.

விஜய்யின் ஒவ்வொரு அணுகுமுறையும் நிதானமும் அப்படித்தான் நினைக்கவைக்குது. ஒருவேளை அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மை செய்பவராக இருப்பார்.

அனிதா வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லுவதாக இருக்கட்டும், தூத்துக்குடிக்கு சென்று அங்கே ஆறுதல் சொன்னவிதமாகட்டும். எல்லாமே விஜய்யின் அரசியலைக் காட்டுகிறது.

சிலபேர், சர்கார் படத்துக்காக அதன் ப்ரமோஷனுக்காக விஜய் சொல்லும் ஸ்டண்ட் பேச்சு என்றும் சொல்லுகிறார்கள்.

இருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரு படத்துக்குப் ப்ரமோஷன் தேவைதானே. அப்படிச் செய்யட்டுமே. அதனால் என்ன தப்பு.

இவ்வாறு நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close