[X] Close

நான் தைரியமானவ; பயந்து ஓடிட்டாங்க! – பிக்பாஸ் ரித்விகா


rithvika-biggboss

ரித்விகா

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 19:10 pm
  • அ+ அ-

இயல்பாகவே நான் மிகவும் தைரியமானவள். என்னைக் கண்டு பயந்து ஓடியேவிட்டார்கள் என்று பிக்பாஸ் ரித்விகா பேசினார்.

விழா ஒன்றில் கலந்துகொண்ட ரித்விகா, அந்த விழாவில் பேசியதாவது:

பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, குறிப்பாக பாலியல் பிரச்சினைகளைக் கண்டு எந்தச் சூழலிலும் பயந்துவிடாதீர்கள். தைரியமாக இருங்கள்.

இந்த திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. ஒருவகையில் இது உண்மையாக இருக்கலாம். அதேசமயம் எந்த நிலையிலும் இதற்கு பெண்களே இடம் கொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதும் முக்கியம்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே, எனக்கும் பாலியல்ரீதியான பிரச்சினை வந்திருக்கிறது. ஆனால் அதை நான் தைரியமாக எதிர்கொண்டேன். பயந்து ஓடியேவிட்டார்கள்.

இவ்வாறு ரித்விகா பேசினார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close