[X] Close

வழக்கு தொடருவேன்: ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டுக்கு நடிகர் அர்ஜுன் பதில்    


arjun-responds-to-metoo-allegations

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 20 Oct, 2018 18:35 pm
  • அ+ அ-

எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்ததில்லை என்றும், தன் மீது குற்றாச்சாட்டை முன்வைத்துள்ள ஸ்ருதி மீது வழக்கு தொடரவிருப்பதாகவும் நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.

'நிபுணன்' படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக, அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக தேசிய அளவில் மீடூ இயக்கம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்தக் குற்றச்சாட்டை ஸ்ருதி கூறியுள்ளா. இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து, 'நிபுணன்' பட இயக்குநர் இது பற்றிய தனது தரப்பு விளக்கத்தைத் தந்து, இருவருமே எனது நண்பர்கள், அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி என்னிடம் எதுவும் வரவில்லை, அதனால் அது பற்றி பேசுவது முறையாகது என்று கூறியுள்ளார்.

தற்போது, கன்னட செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு இது தொடர்பாக பதிலளித்துள்ள நடிகர் அர்ஜுன், "நான் இதுவரை எந்தப் பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. என்னைப் பற்றி யாரும் இப்படியான புகார் கூறியதும் இல்லை. நான் ஸ்ருதியுடன் அந்தப் படத்தில் வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். அவரை நான் எங்கேயும் அழைத்ததில்லை. ஸ்ருதியின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இப்படியான பொய் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், மீடூ இயக்கம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறியுள்ள அர்ஜுன், ஸ்ருதி மீது வழக்கு தொடர்வுள்ளதாகவும் பேசியுள்ளார். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close