[X] Close

ஒரே இரவில் எதுவும் மாறிவிடாது!- சபரிமலை பிரச்சினையில் குஷ்பு கருத்து


a-custom-made-hundreds-of-years-ago-cannot-be-changed-overnight

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 12:09 pm
  • அ+ அ-

சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டரில், "சபரிமலை லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரிய தலம். உச்ச நீதிமன்றம் சபரிமலை செல்வதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறது. முடிவெடுக்கும் சுதந்திரத்தை நமக்கு வழங்கியிருக்கிறது.

ஆனால், ஆண்டாண்டு காலமாக சில சம்பிரதாயங்களை நம்பிக்கையாகக் கொண்டு வாழ்பவர்களை புண்படுத்த வேண்டாமே. எல்லா மத நம்பிக்கைகளும் நமக்கு மரியாதையையே கற்றுக் கொடுக்கிறது.  ஒரு விஷயத்தை ஃபேஷன் என்பதற்காக நாம் எதிர்ப்பு காட்டக்கூடாது. ஒவ்வொரு மத நம்பிக்கையாளருக்கும் அவரவர் நம்பிக்கையை பாதுகாப்பது பிறப்புரிமை.

நாம் சற்று வேகம் காட்டுகிறோம். நூறாண்டு பழக்கத்தை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது. முதலில் மனங்களில் மாற்றம் வேண்டும். அதைவிடுத்து நாம் போராட்டம் நடத்தினால் பிரச்சினைகள் சிக்கலாகிவிடும்" எனப் பதிவிட்டார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா, மற்றும் பெண்ணியவாதி ரஹேனா ஆகியோர் சபரிமலை நோக்கிச் சென்றனர். அவர்கள் நிலப்பந்தல் அடைந்தபோது பக்தர்கள் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில், கேரள அரசும் உண்மையான பெண் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் பலத்தை நிரூபிக்கும், போராட்டம் நடத்தும் இடமல்ல சபரிமலை எனக் கூறியது.

இதனையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண் பத்திரிகையாளார் கவிதா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ரெஹேனா பாத்திமா ஆகியோர் எதிர்ப்பு காரணமாக பம்பைக்கு திரும்பினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close