கடந்த மார்ச் மாதத்தில் நடிகை தாப்ஸி தனது காதலரை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருக்கும் நிலையில், இணையத்தில் இந்த ரகசிய திருமண வீடியோ கசிந்து வைரலாகி இருக்கிறது.
நடிகை தாப்ஸி தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23 அன்று உதய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். முன்னாள் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போவை கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வந்தார் தாப்ஸி. காதலை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட தாப்ஸி, திருமணம் செய்து கொள்வதை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை.
இப்படி ரகசியமாக நடந்த இவரது திருமணத்தில் நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கின்றனர். திருமணம் தொடர்பான புகைப்படங்களும் அந்த சமயத்தில் வெளிவராமல் இருந்ததால் இந்த செய்தி உண்மைதானா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
அந்த சந்தேகத்தை போக்கும் வகையில், தாப்ஸியின் ரகசிய திருமண வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில், மலைகள் சூழ நதிக்கரையில் தனது திருமணத்தை முடித்திருக்கிறார் தாப்ஸி.
இவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 20 அன்றே தொடங்கி இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து வெகு சில பிரபலங்கள் மட்டுமே தாப்ஸி திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!