[X] Close

”என்னவொரு நடிப்பு” - த்ரிஷாவை புகழ்ந்து தள்ளிய சமந்தா!


samantha-about-trisha

  • kamadenu
  • Posted: 18 Oct, 2018 13:46 pm
  • அ+ அ-

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி முதலானோர் நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தை பார்த்த பலரும் தங்கள் பள்ளி கால நினைவுகள் மீண்டும் வருவதாக சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டனர். அதோடு விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் நடிப்பும் பலராலும் சிலாகிக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில்,

”96 படம் பார்த்தேன்.. கடவுளே என்ன ஒரு நடிப்பு.. படத்தில் நீங்கள் எவ்வளவு அற்புதமாக இருந்தீர்கள் என்று எனக்கு சொல்ல வார்த்தைகள் வரவில்லை. நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறீர்கள். இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் கடினம். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இந்த வெற்றி தொடரட்டும்.” இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close