[X] Close

ஜான் விஜய் ரொம்ப மோசம்!- மீ டூ ஹேஷ்டேகில் பாடகி ஸ்ரீரஞ்சனி புகார்


this-incident-happened-in-2014-with-actor-john-vijay

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 15:08 pm
  • அ+ அ-

பின்னணி பாடகியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் புகார் சொல்லியிருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் இது பிரபலமாகி வருகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அதேபோல் தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் கூறியிருந்தார்.

பின்னர், இயக்குநர் சுசி கணேசன் மீது மீ டூ ஹேஷ்டேகின் கீழ்  கவிஞர், ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இன்று நடிகர் ஜான் விஜய் மீது பின்னணி பாடகியும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான ஸ்ரீரஞ்சனி புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,  "இந்த சம்பவம் எனக்கு 2014-ல் நடந்தது. நடிகர் ஜான் விஜய் தான் அந்த நபர். என்னை இதைப்பற்றி பேசவைத்த எனது கணவர் அமித் பார்கவ் மற்றும் துணிச்சலாக குரல் எழுப்பிய சின்மயி ஆகியோருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் இணைத்துள்ள சிறிய விளக்கத்தில், "ஜான் விஜய் பெண்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார். வலுக்கட்டாயமாக பாலுறவு கோரும் பிறழ் மனம் கொண்டவர். ஒருமுறை நான் அவரை பேட்டி கண்டிருந்தேன். ஆனால் அது முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் பின்னிரவில் அவர் எனக்கு ஃபோன் செய்தார். நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பு பற்றி நீங்கள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே என வழிந்தார். நான் நாளை பேசுகிறேன் என்றேன். ஆனால், அவரோ தொலைபேசியில் ஆபாசமாக பேச முற்பட்டார். உங்கள் மனைவிக்கு நான் ஃபோன் செய்வேன் எனக் கூறியவுடன் தான் அவர் அழைப்பைத் துண்டித்தார். அதன்பின்னர் நிறைய பெண்களிடம் நான் ஜான் விஜய் குறித்து எச்சரித்திருக்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

மீ டூ சர்ச்சை கவிஞர், இயக்குநர், நடிகர் என கோலிவுட்டை சுற்றி வலுத்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close