கன்னட நடிகர் சிவராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தெரிகிறது.
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் சிவராஜ் குமார். கன்னடப் படங்கள் மட்டுமல்லாது தமிழில் ‘ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் இன்னும் பரவலாக அறிமுகமானார். தேவனஹள்ளி அருகே படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது, ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நிலை சரியில்லாததை உணர்ந்தார் சிவராஜ்குமார்.
இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு படப்பிடிப்பு தளத்தில் அதிக தூசி இருந்ததே அவரது அந்த திடீர் சிரமத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வழக்கமான பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தற்போது சிவராஜ்குமார் நலமாக இருப்பதாகவும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் சிவராஜ்குமாரின் வலது தோள்பட்டையில் சோர்வு மற்றும் வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் கிளம்பியது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு இல்லை என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் தூசி பிரச்சினையால் அவதிக்குள்ளாகி இருக்கிறார் சிவராஜ்குமார்.
இதையும் வாசிக்கலாமே...
‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!
முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!
‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்
காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?