[X] Close

சினிமா பக்கமே திரும்பமாட்டேன்!- 'ஒஸ்தி' நடிகை ரிச்சா


movie-thing-was-just-a-short-term-fling-and-that-i-have-no-desire-to-return

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 13:36 pm
  • அ+ அ-

'மயக்கம் என்ன' படத்தில் தனுஷுக்கு இணையாகவும் 'ஒஸ்தி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். இவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பப்போவதில்லை என தனது ட்விட்டர் வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டரில், "எனக்கு 90 வயது ஆகும்போது கூட என்னிடம் "உங்களின் அடுத்த படம் எப்போது?" என்ற கேள்வி கேட்கப்படும் என்ற யதார்தத்தை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதேவேளையில், திரைப்பட பிரவேசம் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு குறுகிய கால வீச்சு. அதற்குள் மீண்டும் திரும்ப நான் விரும்பவில்லை. கடந்துவிட்டேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

2013 இல் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா. அந்த படத்திற்கு பின்னர் சிம்புவுடன் 'ஒஸ்தி' படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள ரிச்சா தெலுங்கில் 7 படங்களில் நடித்துள்ளார். படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரிச்சா  சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம். பி. ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close