[X] Close

அப்பா நியாயமானவர்னு என் குழந்தைங்க எல்லார்க்கிட்டயும் சொல்லணும் - சுசிகணேசன் வேதனை


susi-ganesan-case

இயக்குநர் சுசி கணேசன்

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 12:20 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இப்போது, என் குழந்தைகள் நான் குற்றமற்றவன் என்று நம்புகிறார்கள் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய ஆறுதல். நாளை... என் குழந்தைகள் எல்லோரிடமும் எங்கள் அப்பா நல்லவர் என்று சொல்வதற்குத்தான் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறேன் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.

மீ டூ என்கிற பெயரில், பிரபலங்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், இயக்குநர் சுசி கணேசன் மீது லீலா மணிமேகலை என்பவர், பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் சுசி கணேசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கங்கள் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்த இரண்டு மூன்று நாட்களாக என் வீடு துக்க வீடு போல உள்ளது. என் அப்பா ரொம்ப நல்லவர். பண்பானவர். ஒரு கிராமத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவன்.

இப்போது லீலா மணிமேகலையின் பொய்யான புகாரால், கூனிக்குறுகி நிற்கிறேன். நடுத்தெருவில் என்னை நிற்கவைத்து தொங்கவிட்டிருக்கிறார். உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய நிலைமையில் நான் இருக்கிறேன்.

இந்த மூன்று நாட்களும் என் குழந்தைகள்தான் எனக்கு மிகப்பெரிய ஆறுதலைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான், அவர்களின் மன வேதனையைப் புரிந்துகொண்டுதான், இந்த விளக்கம் தருவதற்கு வந்திருக்கிறேன்.

மேலும் லீலா மணிமேகலை மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். இப்போது, நான் குற்றமற்றவன் என்பது என் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்கிறது. அந்த நிம்மதிதான் என்னை இயங்கவைத்திருக்கிறது. நாளை... எங்கள் அப்பா நல்லவர் என்று என் குழந்தைகள் எல்லோருக்கும் சொல்லவேண்டும். அதற்காகத்தான் இந்த விளக்கம். கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு.

உண்மை நிச்சயம் வெல்லும். கடவுள் பக்தி கொண்டவன் நான். சத்தியம் வெல்லும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது எனக்கு.

இவ்வாறு சுசி கணேசன் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close