கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!


தமன்னா

”கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது கீழ்த்தரம் கிடையாது. அது ஒருவகையான கொண்டாட்டம். இதுகுறித்தான பார்வை மாற வேண்டும்” என நடிகை தமன்னா மனம் திறந்துள்ளார்.

தமன்னா

ஓவர் நைட் சென்சேஷன் போல, ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஆனார் நடிகை தமன்னா. இந்தப் பாடலில் நடிகை தமன்னாவின் கிளாமர், நடனத்திற்கு ரசிகர்கள் ஃபயர் விட்டு வந்தனர். யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வைகளைக் கடந்தது மட்டுமல்லாது, சமூகவலைதளங்களில் இளசுகள் மத்தியில் ரீல்ஸ் பறந்தது.

அதேபோல, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்2’ படத்தில் தன் காதலர் விஜய் வர்மாவுடன் நெருக்கமாக தமன்னா நடித்த காட்சிகளும் ஹைப் ஏற்றியது. இப்படி கடந்த வருடத்தின் சென்சேஷன் நடிகையாக இருந்தார் தமன்னா.

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை4’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் குறித்து பேட்டியளித்த தமன்னாவிடம், “ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கிளாமர் காட்டுவதும் அது போன்ற பாடல்களில் நடனம் ஆடுவதும் கொண்டாட்டம்தான்” எனக் கூறியுள்ளார்.

'காவாலா’ பாடலில் தமன்னா

இதுகுறித்து மேலும் பேசிய அவர், “கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது. இதுகுறித்தான எண்ணத்தை ரசிகர்கள் மாற்ற வேண்டும். ’காவாலா...’ பாடலைப் பார்த்துவிட்டு சிலர் கீழ்த்தரமாக இருக்கிறது என்றெல்லாம் கமென்ட் செய்தார்கள். உண்மையில், அது எனக்கு ஆச்சரியம்தான்! கிளாமர் பாடல்கள் ஒருவகை கொண்டாட்டம்தான். அதை ரசிக்கப் பழக வேண்டுமே தவிர, இப்படி நெகட்டிவிட்டி பரப்பக்கூடாது. பெண்களும் கிளாமர் குறித்தான பார்வையை மாற்ற வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x