பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவை நடிகை பூஜா ஹெக்டே காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், இருவரும் ஒரே காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள பிரபல நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கில் ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’, இந்தியில் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ என நடித்துள்ளார். இவரின் சமீபத்தியப் படங்கள் அனைத்துமே தோல்வியைத் தழுவி வரும் நிலையில், சினிமாவுக்கு சிறிது காலம் பிரேக் விட்டிருந்த பூஜா இப்போது மீண்டும் சினிமாவில் எண்ட்ரி ஆகியுள்ளார்.
இந்நிலையில், காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படும் பாலிவுட் நடிகர் ரோகன் மெஹ்ராவுடன் காரின் பின் பக்க சீட்டில் அமர்ந்து இந்த ஜோடி பேசிக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘அப்போ கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் உண்மைதானா? பூஜாவின் காதலர் இவர்தானா?’ என இதயம் நொறுங்கிப் போய் வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கைக் காட்டிலும் பாலிவுட்டில் படங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பூஜா ஹெக்டே.
‘சர்கஸ்’, ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இப்போது ‘தேவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் வாசிக்கலாமே...
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!
வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!
தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!
ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!