`தளபதி 68’ படத்தில் விஜயுடன் இணையும் டோலிவுட் ஹீரோயின்... அசத்தல் அப்டேட்!


'தளபதி 68’

நடிகர் விஜயின் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க இருக்கும் புது டோலிவுட் ஹீரோயின் குறித்தானத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

‘தளபதி 68’

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர்கள் மீனாட்சி, சிநேகா, லைலா, மோகன், பிரபுதேவா, ஜெயராம் என பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளும் நடனக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. இந்த நிலையில், டீஏஜிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற தகவலும் வெளியானது.

இதன் படப்பிடிப்பு துருக்கியில் நடப்பதாக சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். ஏற்கெனவே, மீனாட்சி செளத்ரி இதில் கதாநாயகி என சொல்லப்படும் நிலையில், ’நெலா டிக்கெட்’ என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான மாளவிகா ஷர்மாவும் இதில் இணைந்துள்ளார். ’சிவப்பு’, ’ஹரோம் ஹரா’ போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ’காதலுடன் காபி’ படத்தில் அறிமுகமாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது தளபதி 68 படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறாராம் மாளவிகா ஷர்மா. தளபதி 68ல் மாளவிகா ஷர்மாவின் கேரக்டர் மிக முக்கியமானது என்றும், அதனால் அவர் கமிட்டானது குறித்து எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை என சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x