[X] Close

நீ ஒரு போராளி!- சின்மயிக்கு ரம்யா பாராட்டு


it-takes-guts-to-to-stand-up-and-fight-you-are-a-warrior

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Oct, 2018 14:59 pm
  • அ+ அ-

பாடகி சின்மயிக்கு நடிகையும் தொகுப்பாளினியுமான ரம்யா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தனது ட்விட்டரில் மீ டூ இயக்கத்தைப் பற்றிய அறிக்கையைப் பகிர்ந்து அத்துடன் "இப்படி எழுந்து நின்று போராட ஒரு துணிவு வேண்டும். நீ ஒரு போராளி சின்மயி" எனப் பதிவிட்டுள்ளார்.பின்னணி பாடகி சின்மயி #MeToo ஹேஷ்டேக் கீழ் பாலியல் புகார் முன்வைத்தது தமிழ்த் திரையுலகில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சின்மயிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர்.

இந்நிலையில், பாடகி சின்மயிக்கு நடிகையும் தொகுப்பாளினியுமான ரம்யா ஆதரவு தெரிவித்திருக்கிறார். 

அவர் பகிர்ந்துள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக மீ டூ இயக்கத்தின் கீழ் தங்கள் வேதனைப் பகிர்கின்றனர். மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதேவேளையில் வேதனையை சொல்பவர்களையே சிலர் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இது இன்னும் அதிர்ச்சியாக இருகிறது. 

பாலியல் துன்புறுத்தலின் பின்னால் இருக்கும் கலாச்சாரமே அது மறைக்கப்பட வேண்டியது என்ற வகையில் பின்னப்பட்டிருக்கிறது. இதை வெளியே சொன்னால் இன்னும் சிக்கலாகுமோ என்ற அச்சத்திலும் அவமான உணர்விலுமேயே நிறைய ஆண்களும் பெண்களும் இதை வெளியில் சொல்லாமல் தவிக்கின்றனர். யாரேனும் ஒருவர் துணிச்சலுடன் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லும்போது அதை நாம் மதித்து அவர்களுக்கு செவி சாய்க்க வேண்டும். பெண்களை மதிக்கும் ஆண்கள் இந்த இயக்கத்துக்கு துணை நிற்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close