[X] Close

சின்மயி, விஷால், கமல்; ராதாரவி பேச்சால் சர்ச்சை


radharavi-speech

நடிகர் ராதாரவி

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 11:35 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

மீ டூ குறித்தும் இப்போதைய சினிமா உலகம் குறித்தும் நடிகர்களின் அரசியல் குறித்தும் நடிகர் ராதாரவி பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு நடிகர் ராதாரவி பேசியதாவது:

பொதுவாகவே இதுமாதிரியான ஆடியோ விழாவுக்கெல்லாம் நான் வருவதே இல்லை. ஆனால் இதுபோன்ற சிறு படங்களுக்கெல்லாம் வந்து ஆதரிக்கவேண்டும் எனும் நோக்கத்தில்தான் வந்தேன். இதுமாதிரியான சிறிய படங்கள் பெருகவேண்டும். அதுதான் சினிமாத்துறைக்கு நல்லது.

ஆனால் இப்போது சினிமாத்துறை நல்லவிதமாக இல்லை. யாரிடம் பேசுவதற்கும் பயமாக இருக்கிறது. ‘பாத்து சார்... மீ டூல உங்க பேரை சேத்துடப் போறாங்க’ன்னு நண்பர்கள் கிண்டலாப் பேசுற அளவுக்கு இன்னிக்கி வந்துருச்சு.

ஒண்ணு தெரிஞ்சிக்குங்க. யாரையோ மாட்டிவிடுறதா நினைச்சு, மீ டூன்னு சொல்லி, நீங்களே மாட்டிக்கிறீங்க. அதை முதல்ல புரிஞ்சுக்குங்க. இது, நம்மள நாமளே செருப்பால அடிச்சிக்கிற மாதிரிதான்னு ஏன் புரியல உங்களுக்கு?

ஒருத்தங்க என்னடான்னா, பத்து வருஷத்துக்கு முன்னாடி அவர் அப்படிச் செஞ்சாருன்னு சொல்றாங்க. இன்னொருத்தர் என்னடான்னா, பெண்களைப் பாதுகாக்க அமைப்பை உருவாக்குவோம்னு சொல்றாரு. பாத்துப் பேசுங்க... நாளைக்கே உங்களையும் மீ டூல சேத்துருவாங்க. இப்ப பேஸ்புக்ல, டிவிட்டர்ல, வாட்ஸ் அப்புலன்னு இப்படி எதுனா பரபரப்பா வரணும்.

சலூன்கடைலயும் டீக்கடைலயும் உக்கார்ந்து முன்னாடிலாம் அரசியல் பேசுவாங்க. இப்படி அரசியலே குழம்பிப்போயிருக்கு. அதனால, அவங்க பேசுறதுக்கு இந்த மீ டூ தான் டாபிக். ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆனா கூத்தாடி ரெண்டுபட்டா, அது ரொம்ப மோசமாயிரும்.

போற போக்குல மீ டூன்னு சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்காங்க. நானும் ஒரு ரெண்டுபேரைச் சொல்லிடலாம் போல!

முதல்ல, எட்டு வருஷத்துக்கு முன்னாடி இப்படி நடந்துக்கிட்டாரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்படி நடந்துக்கிட்டாருன்னு சொல்றவங்க, தயவுசெஞ்சு சினிமாத்துறைலருந்து விலகிப் போயிருங்க. இவங்களையெல்லாம் சினிமால பயன்படுத்தாதீங்க.

எதுலயும் ஒரு நியாயம் இல்லேன்னா எப்படி? வடநாட்லேருந்து ஒரு லேடி, ‘சரி... ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு’னு கேக்கறாங்க. அதுவும் நியாயம்தானே. அப்படிக் கேட்டா, பெண்களுக்கு எதிரியாயிருவோம்னு பயந்துட்டாங்க இங்கே!

இத்தனை நடந்துட்டிருக்கு. சினிமா செத்துக்கிட்டிருக்கு. அதை கவனிங்கய்யா முதல்ல. படம் ஓடுதா, தயாரிப்பாளருக்கு லாபமா, தியேட்டர்காரங்களுக்கு சந்தோஷமான்னு பாருங்க. அதைவிட்டுட்டு, மீ டூங்கறீங்க. இதுல ஒருத்தர், தொண்டர்களைத் தேடி வரலை, தலைவர்களைத் தேடி வந்துருக்கேன்னு சொல்றாரு. சினிமாவுல இருந்துக்கிட்டு, அதைக் காப்பாத்த என்ன பண்ணமுடியும்னு பாருங்க முதல்ல.

இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close