கடத்திக் கொல்ல பார்த்தார்கள்... பிக் பாஸ் நடிகையின் ஷாக் ஸ்டேட்மெண்ட்!


ஃபிரோசா கான்

குடிசைப் பகுதி ஒன்றிற்கு சென்ற போது தன்னைக் கடத்தி கொல்லப் பார்த்தார்கள் என பிக் பாஸ் புகழ் நடிகை ஃபிரோசா கான் கூறியுள்ளார். இவரது இந்த ஸ்டேட்மெண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்தி பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர் நடிகை - பாடகி ஃபிரோசா கான். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மும்பையில் தான் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, “நான் பலரை வெளியில் சகஜமாக சந்திப்பேன். இதனால், ஆபத்து வரக்கூடும் என்று எனக்கு நெருக்கமானவர்கள் முன்பே எச்சரித்தார்கள். அவர்கள் சொன்னதுபோலவே, அது நடந்தது.

மும்பையில், நலசோபரா குடிசைப் பகுதியில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டேன். அவர்கள் என்னைக் கொல்ல நினைத்தார்கள். ஆனால், அங்கிருந்து அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்து விட்டேன். அந்த சமயத்தில் நான் வெளியில் சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் நடந்தது. ஆனால், அதைப் பற்றி நான் பெரிதாக பேச விரும்பவில்லை. ஒன்று சொல்ல விரும்புகிறேன். அந்த சமயத்தில் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. என்ன நடந்தாலும் மும்பையை விட்டு போக மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இங்கு வருவதற்கு எனது மகிழ்ச்சி, குடும்பம் மற்றும் உணர்ச்சிகளை தியாகம் செய்தேன்” என்றார்.

மேலும், மீடியாவில் வரவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்திற்காக இளவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய விஷயத்தைப் பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டார். “பல சமயங்களில் என்னை நான் கங்கனாவுடன் ஒப்பிட்டுக் கொள்வேன். அவரும் என்னைப் போலவே, குடும்பத்தை விட்டு வந்தார். ஆனால், இதற்காக பல சமயங்களில் நான் வருத்தப்பட்டிருக்கிறேன்.

நான் மட்டுமல்ல, பல இளைஞர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேற நினைக்கிறார்கள். தயவுசெய்து அந்த தவறை செய்யாதீர்கள். பல கஷ்டங்களுக்குப் பிறகு நல்ல இடத்தில் நான் இருப்பதைக் கண்டு என் குடும்பம் மகிழ்ச்சி அடைந்துள்ளது” என்றும் சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x