தான் நடித்த படம் ஒன்றில் நடிகராக மட்டுமல்லாது, பிணத்திற்கு மேக்கப் போட்டு ஒப்பனை கலைஞராகவும் மாறிய சம்பவத்தை மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகியுள்ளது.
மாரடைப்பால் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென காலமாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது. இப்படியான சூழ்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் பிணத்துக்கு நடிகர் டேனியல் பாலாஜி மேக்கப் போட்ட விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பழைய பேட்டி ஒன்றில் டேனியல் பாலாஜி, அமெரிக்காவில் ‘வேட்டையாடு விளையாடு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு காட்சியில் பிணத்திற்கு மேக்கப் போடுவதற்கு பல லட்சம் டாலர் கேட்டார்கள். இதனால், இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். இதனால், படப்பிடிப்பும் தாமதமாகிக் கொண்டிருந்தது.
உடனே, நான் அவரிடம் இருந்து 100 டாலர்கள் வாங்கிக் கொண்டு அருகில் இருந்த கடைக்குச் சென்று மேக்கப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தேன். நானே, பிணத்திற்கு மேக்கப் போட்டேன். அந்தக் காட்சியும் நன்றாக வந்தது. இந்தப் படம் மட்டுமில்லை, ‘அசுரன்’ படத்திலும் ஒரு பிணக்காட்சிக்கு மேக்கப் போட்டிருக்கிறேன். ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’ எனப் பல படங்களிலும் மேக்கப் போட்டிருக்கிறேன்” எனப் பேசியுள்ளார் டேனியல் பாலாஜி.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!
பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!
நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!
கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!
46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!