பிரபல சின்னத்திரை நடிகைக்கு நிச்சயதார்த்தம்... ரசிகர்கள் வாழ்த்து!


ஸ்வேதா- கிரிஷ் திருமண நிச்சயம்

’வானத்தைப் போல’ சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்க ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வேதா- கிரிஷ் திருமண நிச்சயம்

இந்த வருடம் நிறைய சின்னத்திரை பிரபலங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த வரிசையில், சன் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியல் புகழ் நடிகை ஸ்வேதாவும் இணைந்துள்ளார். பெங்களூரு பெண்ணான இவர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நடிப்பின் மீதான ஆர்வத்தால் சின்னத்திரைக்கு வந்தவர், ‘வானத்தைப் போல’ சீரியலில் நடித்து வந்தார். பின்பு, சில காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

ஸ்வேதா- கிரிஷ் திருமண நிச்சயம்

இந்த நிலையில், அவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மியூசிஷியனான கிரிஷ் என்பவரை காதல் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் ஸ்வேதா. இவரது திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

x