[X] Close

திடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாட முடியாது: மீடூ விவகாரம் குறித்து கமல்


kamal-about-metoo-hastag

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 14:37 pm
  • அ+ அ-

திடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாட முடியாது என்று மீடூ விவகாரம் குறித்து கமல் தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ' (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியளவில் பல்வேறு பிரபலங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.‘மீ டூ' ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நாமக்கல் நிகழ்ச்சிகளை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல் பதிலளித்ததாவது:

மீடூ புகார்களில் சினிமாத் துறை என்று தனியாக சொல்ல வேண்டாம். அனைத்து துறைகளிலும் இப்பிரச்சினை இருக்கிறது என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்தப் பிரச்சினைகள் வெளியே வந்தால், தொந்தரவுகள் இருக்காது என்பது தான் உலகளவில் பேசிப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்.

அதில் இரண்டு தரப்பிலும் நியாயத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.நாங்கள் என்ன செய்தாலும், நீங்கள் காட்டிவிடுகிறீகள் ஆகையால் சினிமாத்துறை ஜாஸ்தியாக தெரியலாம். திடீரென்று குற்றம் சொன்னவுடனே யாரையும் சாடிவிட முடியாது. 

இவ்வாறு கமல் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close