விலங்குடன் பாலியல் இச்சை... ’ஆடுஜீவிதம்’ படத்தில் அனுமதி மறுத்த சென்சார் போர்டு!


‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’

பாலைவனத்தில் சிக்கிய நஜீப் தனது பாலியல் இச்சைக்காக ஆடுகளுடன் உறவு கொள்ளும்படியான நிஜ சம்பவத்தை படமாக்கி இருக்கிறது ‘ஆடுஜீவிதம்’ படக்குழு. ஆனால், அதற்கு சென்சார் போர்டு அனுமதியளிக்கவில்லை என்பதை இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்து இருக்கிறார்.

தனது குடும்ப வறுமைக்காக சவுதி பாலைவனத்தில் ஆடுகளை மேய்த்து கஷ்டப்பட்ட நஜீப் என்பவரின் நிஜக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ஆடுஜீவிதம்’. இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இயக்குநர் பிளெஸ்ஸி காத்திருந்தார். பிருத்விராஜூம் உடல் எடை கூட்டி, குறைத்து இந்தப் படத்திற்காக மாறி இருந்தார். யாருமில்லாத பாலைவனத்தில் தப்பிக்க வழி இல்லாமல், குடிக்க நீர், உணவு, மாற்று உடை என எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் துன்பப்பட்டிருக்கிறார் நஜீப்.

தனது மனைவியைப் பிரிந்து, பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் அங்கு துன்பப்பட்டு ஆடுகளை மேய்த்து வருபவர் ஒருக்கட்டத்தில் தன்னை ஆடாகவே நினைத்து வாழ ஆரம்பித்தார். அப்படி குளிர் காலம் ஒன்றில் தனது பாலியல் இச்சையை கட்டுப்படுத்த முடியாமல் ஆடுகளுடன் உறவு கொள்கிறார் நஜீப்.

'ஆடுஜீவிதம்’ படத்தில்

இந்த நிஜ சம்பவத்தை இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜை வைத்து படமாக்கி இருக்கிறார். ஆனால், விலங்குகளுடன் உறவு வைத்துக் கொள்வது போன்ற இந்தக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க முடியாது என சென்சார் போர்டு மறுத்திருக்கிறது.

படத்தின் அன்கட் வெர்ஷன் ஓடிடியில் வந்தால் இந்த காட்சிகள் இருக்கும் எனவும் கூறியிருக்கிறார் பிளெஸ்ஸி. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 2 மணி நேரம் 51 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் ரசிகர்களுக்கு சற்றே அயர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், பிருத்விராஜின் நடிப்பு விருது வாங்கும் அளவிற்கு இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

x