[X] Close

மீ டூ பிரச்சார பரபரப்பில் யூ டூவை மறக்கமாட்டோம்!- மோடியை சாடும் பிரகாஷ் ராஜ்


do-u-think-we-have-forgotten-youtoo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 10:53 am
  • அ+ அ-

பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகாரை தெரிவித்துவரும் மீ டூ இயக்கம் இந்தியாவில் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கருத்து பிரதமர் மோடியை சாடும் வகையில் உள்ளது.

அதில் பிரகாஷ் ராஜ் "குடிமக்களாகிய நாங்கள் மீ டூ பிரச்சார இயக்கத்தில் நீங்கள் தேசத்துக்கு போலி வாக்குறுதிகளையும் முக்கியமான பிரச்சினைகளில் கடைபிடிக்கும் மவுனத்தையும் மறந்துவிடுவோம் என நினைக்க வேண்டாம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பின்னர் பிரகாஷ் ராஜ் #justasking என்ற ஹேஷ்டேக் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில்தான் இப்போது மீடூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்போதுகூட #youtoo என்று ஒரு கருத்தை தெரிவித்து பிரதமர் மோடியை அவர் சாடியிருக்கிறார். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close