’தளபதி 69’ படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குநர்களின் பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ் பெயரும் இருந்தது. ஆனால், விஜய் படத்தை விடுத்து அவர் இப்போது நடிகர் சூர்யாவுடன் புதிய படம் அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
’கங்குவா’ படம் முடித்து அடுத்து சூர்யா எந்தப் படத்தில் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தனது 44வது படமாக இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜூடன் ‘லவ் லாஃப்டர் வார்’ என்ற படத்தை அறிவித்து இருக்கிறார். தீப்பிடித்திருக்கும் காட்டில் சிக்கி இருக்கும் கார் ஒன்று பற்றி எரிய ஆரம்பிக்கிறது.
அதற்கு முன்னால் இருக்கும் மரத்தில் ஹார்ட்டின் செதுக்கப்பட்டிருக்க நடுவில் அம்பு கிடக்கிறது. இதனால், காதல்- போர் என்பதை மையமாகக் கொண்டு கதை நகரும் எனத் தெரிகிறது. காதல் கதையில் சூர்யாவை பார்த்து நிறைய நாட்களாகி விட்டது என அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘தளபதி 96’ படத்தை இயக்கும் இயக்குநர்களின் பெயர் பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜூம் இருந்தார். ஆனால், இப்போது விஜய் பட ரேஸில் இருந்து விலகி சர்ப்ரைஸ் அறிவிப்பாக சூர்யாவுடன் புதிய படத்தை அறிவித்துள்ளார். இதில் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் விவரம் அறிவிக்கப்படவில்லை.
வெற்றிமாறனின் ’வாடிவாசல்’, சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படங்களில் இருந்து சூர்யா விலகி விட்டார் எனத் தகவல் வெளியானது. ஆனால், இதனைப் படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. இதற்கிடையில், இந்தியில் ‘கர்ணன்’ படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா. ஆனால், தமிழில் ‘கங்குவா’ படத்திற்கு அடுத்து உடனடியாக அவர் என்னப் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த அறிவிப்பு அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!