தனுஷ் படப்பாணியில் காதலியைக் கரம் பிடிக்கும் நடிகர் கிஷன் தாஸ்...குவியும் வாழ்த்து!


கிஷன் தாஸ்- சுசித்ரா

தனது நீண்ட நாள் தோழியான சுசித்ராவுடன் நடிகர் கிஷன் தாஸ்க்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ படம் போலதான் என் காதலும் எனக் கூறி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் கிஷன் தாஸ்.

தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பிரபல யூடியூபர் கிஷன் தாஸ். இவர் சின்னத்திரை நடிகை பிருந்தாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ’முதல் நீ முடிவும் நீ’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது. இவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார். சமீபத்தில்தான் இவருக்குத் திருமணம் முடிந்தது. இவரைத் தொடர்ந்து இப்போது கிஷன் தாஸூக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர், ‘அவள் எனக்கு சம்மதம் சொன்னாள். ’திருச்சிற்றம்பலம்’ படம் போலவே, நிஜ வாழ்விலும் என் நெருங்கிய தோழி சுசித்ராவுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

சுசித்ராவுடன் கிஷன் தாஸ்,

இந்த நிகழ்வில் இருவரும் ஒருவருக்கொருவர் பாடல் பாடி டெடிகேட் செய்து அசத்தியுள்ளனர். இவரது இந்த சர்ப்ரைஸ் பதிவைப் பார்த்து கெளரி கிஷன், கெளதம் கார்த்திக், ரெஜினா, அஞ்சனா, கிகி விஜய் எனப் பல பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து சொல்லி ’திருமணம் எப்போது?’ எனக் கேட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

x