#Thalaivar171: தங்க வாட்சில் கைவிலங்குடன் கோல்டன் கூலர்... ரெட்ரோ லுக்கில் ரஜினியின் 'தலைவர் 171' அப்டேட்!


ரஜினிகாந்த்துடன், லோகேஷ் இணையும் ’தலைவர் 171’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படம் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலை முதலே இதை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பட அப்டேட்டை சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு தனது 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புத் துவங்க இருக்கும் நிலையில், இதன் அப்டேட் குறித்து காலை முதலே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 அன்று வெளியாகும் என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் அண்ட் வொயிட் லுக்கில் கோல்டன் கலர் கூலர், தங்க நிற வாட்சிலான கைவிலங்கு என ரெட்ரோ லுக்கில் செம மாஸாக இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் பின்னணியில் வாட்ச் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.சுவாரஸ்யமான பின்னணியில் வந்திருக்கும் இதன் கதை எதைப் பற்றியது என ரசிகர்கள் விவாதத்தை தொடங்கியுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினி லோகேஷ் இணையும் ’தலைவர் 171’

’மாநகரம்’ முதல் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ படம் வரை எல்சியூ கனெக்‌ஷன் கதையில் இருக்கும். ஆனால், ரஜினியை வைத்து இவர் இயக்கும் இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் தனிக்கதையாக உருவாக இருக்கிறதாம். இந்தப் படத்தின் கதைக்காக கடந்த நான்கைந்து மாதங்களாக ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் லோகேஷ்.

இடையில் ஸ்ருதி ஹாசனுடன் இவர் ‘இனிமேல்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இதனால், ’‘தலைவர் 171’ படம் நடக்காமல் போகுமா?’ என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். படம் நிச்சயம் நடக்கும் என்பதை உறுதிப்படுத்திய லோகேஷ், இதற்கடுத்து ‘கைதி2’ படமும் நடக்கும் எனக் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

x