சூர்யா - சமந்தா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
’அஞ்சான்’ படம் வெளியாக இருந்த சமயத்தில் அந்தப் படம் குறித்து பேசும்போது, “கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதுல இறக்கிருக்கேன்” எனச் சொன்ன லிங்குசாமியின் ஓவர் கான்ஃபிடன்ஸ் அப்போது ‘அஞ்சான்’ படத்திற்கு பெரிய பேக் ஃபயராக இருந்தது.
‘அப்படி ஒன்னும் கதையில பெருசா இல்லையே’ என ‘அஞ்சான்’ படத்தை வறுத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். சமூகவலைதளங்கள் வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் லிங்குசாமி படம் குறித்து சொன்ன இந்த வார்த்தையே படத்தோல்விக்கு வழிவகுத்தது. ஆனால் கொஞ்ச நாள் போனதும், ‘படம் அப்படி ஒன்றும் மோசமில்லையே!’ என்ற கமென்ட்டையும் பார்க்க முடிந்தது.
2014-ல் ‘அஞ்சான்’ ரிலீஸ் ஆனது. அந்த சமயத்தில் படத்தின் தோல்விக்குக் காரணமாக படத்தின் நீளத்தைக் குறிப்பிட்ட இயக்குநர் லிங்குசாமி, ”நீளம் குறைத்து ரீ-எடிட் செய்து மீண்டும் படத்தை வெளியிடப் போகிறேன்” எனச் சொல்லி இருக்கிறார்.
இந்த விஷயம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களாக சூர்யாவின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாக வில்லை. ‘கங்குவா’ படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ‘அஞ்சான்’ ரீ ரிலீஸ் செய்தி சற்றே ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...