நாங்கள் பட்ட கஷ்டத்தை டீ கொடுக்கும் பையனும் அனுபவித்தார்... ’ஆடுஜீவிதம்’ பிருத்விராஜ்!


பிருத்விராஜ்

”பாலைவனத்தில் நடிகர்கள் மட்டுமல்ல, அங்கு எங்கள் எல்லோருக்கும் டீ கொடுக்கும் பையன்களும் கூட அதே துன்பத்தை அனுபவித்தார்கள். அதனால், அவர்கள் பெயரும் நேம் கார்டில் இருக்கும்” என ‘ஆடுஜீவிதம்’ படம் குறித்துப் பேசி இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

தனது குடும்ப வறுமைக்காக சவுதி பாலைவனத்தில் கஷ்டப்பட்ட நஜீப் என்பவரின் நிஜக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ஆடுஜீவிதம்’. நாளை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இயக்குநர் பிளெஸ்ஸி காத்திருந்தார். பிருத்விராஜூம் உடல் எடை கூட்டி, குறைத்து இந்தப் படத்திற்காக மாறி இருந்தார்.

படத்தில் நிஜ பாலைவனத்தில் நடிகர்கள், இயக்குநர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார்களோ அதுபோலவே, அங்கிருந்த தொழில்நுட்பக் கலைஞர்களும், டீ கொடுக்கும் பையனும் துன்பப்பட்டார்கள் எனப் பேசியிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’

இதுகுறித்து பேசியிருக்கும் பிருத்விராஜ், “நாங்கள் மட்டும் அந்தப் பாலைவனத்தில் துன்பப்படவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள், டீ கொடுக்கும் பையன் என எல்லோருமே கஷ்டப்பட்டார்கள். அவர்கள் இருந்ததால்தான் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. டீ கொடுக்கும் பையன் இருந்ததால்தான் கேமராவுக்கு அப்பால் பசி இல்லாமல் நாங்கள் இயங்க முடிந்தது. இதனால், இவர்கள் அனைவருமே இந்தப் படத்தின் வெற்றிக்குத் தகுதியானவர்கள்.

வழக்கமாக படங்களில் நடிகர்கள், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான நேம் கார்டு போடுவோம். ஆனால், இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 11 நிமிஷங்கள் படத்திற்காக உழைத்த யாருடைய பெயரையும் விடாமல் நேம் கார்டில் சேர்த்திருக்கிறோம்” என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

x