'74xmanavalans' என்ற கேரளாவைச் சேர்ந்த நடனக்குழு லுங்கி, வேஷ்டியுடன் மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 74xmanavalans நடனக் குழு இந்திய பாரம்பரிய உடைகள் அணிந்து, சர்வதேச பாப் இசைக்கு குறிப்பாக, மைக்கேல் ஜாக்சன் பாடலுக்குத் துள்ளலான நடனம் ஆடி பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த நடனக் குழுவில், திறமையான நடனக் கலைஞர்களான ஜீவ், விஜீஷ் விச்சு, ராகேஷ் ரக்கு மற்றும் தாஜ்ஜு ராஜில் ஆகியோர் உள்ளனர்.
இதற்கு முன்பு, இந்திய கலாச்சாரத்துடன் இணைத்து சர்வதேச இசைக்கு அவர்கள் ஆடும் பல நடன வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது.
கேரள தொலைக்காட்சியில் இதற்கு முன்பு ஒளிபரப்பான ‘டான்சிங் ஸ்டார்’ என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் இந்தக் குழு பங்கேற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் கொச்சியில் இவர்கள் நடனக்குழு வைத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சன் பாடலுக்கு லுங்கியுடன் இவர்கள் நடனம் ஆடியுள்ள வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டி, ‘இதுதான் நிஜ லுங்கி டான்ஸ்’ எனச் சொல்லி பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!
எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!