'குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்... யார் யார் தெரியுமா?


'குக் வித் கோமாளி5’

'குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்குவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை களமிறக்க முடிவு செய்திருக்கிறது நிகழ்ச்சி குழு. அவர்கள் யார் என்பது குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல ‘குக் வித் கோமாளி’ ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிக்க, அவருக்குப் பதிலாக நடிகர், செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார். இதற்கான புரோமோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

நடுவர்கள் ரெடி, அப்போ போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்தான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலங்களே அதிகமாக செஃபாக நிகழ்ச்சியில் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில், நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக்க பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களை களமிறக்க முடிவு செய்திருக்கிறது நிகழ்ச்சி குழு.

பூர்ணிமா

அந்த வகையில், நடந்து முடிந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகை பூர்ணிமா ரவி, தினேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதேபோல, இதற்கு முந்தைய சில ‘குக் வித் கோமாளி’ சீசனில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட விஜே பிரியங்காவும் போட்டியாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்க இருக்கிறார்.

இவர்கள் தவித்து, யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகை திவ்யா துரைசாமி ஆகியோரும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x