'புஷ்பா2’ வில் மீண்டும் சமந்தா... இயக்குநர் சொன்ன ஸ்வீட் நியூஸ்!


சமந்தா

அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா2’ படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் சுகுமார் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

புஷ்பா - அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘புஷ்பா1: தி ரைஸ்’. வசூல் ரீதியாக இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த இன்னொரு விஷயமாக அமைந்தது நடிகை சமந்தாவின் டான்ஸ் நம்பர். ‘ஊ சொல்றியா...’ பாடலுக்கு அவர் போட்ட குத்தாட்டம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்.

ஆனால், இப்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவுக்கு பதிலாக டான்ஸ் நம்பர் ஆடும் அந்த வாய்ப்பு ஸ்ரீலீலாவுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமந்தா

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சுகுமார் “ சமந்தா இரண்டாம் பாகத்தில் கேமியோவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. இதுமட்டுமல்லாது, படம் முடியும் போது சிறு பாடல் காட்சியிலும் சமந்தா இருக்க வேண்டும். நிச்சயம் அவரது கதாபாத்திரம் மூன்றாவது பாகத்திலும் இருக்கும்” என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குநரின் இந்த வேண்டுகோளுக்கு சமந்தா செவி சாய்க்கிறாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

’ஊ சொல்றியா’ பாடல் என்னதான் சமந்தாவுக்கு ஹிட் நம்பராக அமைந்திருந்தாலும் அந்தப் பாடலுக்கு நடனம் ஆடும்போது தான் பயந்து நடுங்கியதாகவும் இதுபோன்ற கிளாமர் தான் காட்டியதில்லை எனவும் முன்பு சமந்தா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x