[X] Close

சிம்புவுக்கு வில்லனா நடிக்கச் சொன்னாங்க; அவ்ளோ பெருந்தன்மை இல்லை எனக்கு! - ’வடசென்னை’ தனுஷ்


vadachennai-dhanush

வடசென்னை - தனுஷ்

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 14:34 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிம்புவை ஹீரோவாக்கி என்னை வில்லனாக நடிக்கச் சொன்னார் வெற்றிமாறன். அவ்வளவு பெருந்தன்மையெல்லாம் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன் என்று வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுச் சொன்னார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல்பாலாஜி, பவன் முதலானோர் நடிக்கும் படம் வடசென்னை. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வடசென்னை வருகிற 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் வடசென்னைக் குழுவினர், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தனுஷ் பேசியதாவது:

வடசென்னை கதையை பல வருடங்களுக்கு முன்பே என்னிடம் சொன்னார் வெற்றிமாறன். ஆனால் இந்தப் படத்தைப் பண்ணுவதற்கு உண்டான பட்ஜெட்டெல்லாம் அதிகம். பிறகு பொல்லாதவன் பண்ணினோம்.

இதன் பிறகு, மீண்டும் வடசென்னையைப் பற்றி பேச்சு எடுத்தார். கண்டிப்பாப் பண்ணுவோம் என்று சொன்னேன். ஆனால் இதற்கான பட்ஜெட் பெருசு. அதற்கான மார்க்கெட் வேல்யூவும் அவசியம். என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பிறகு சரி, வேறு ஒரு படம் பண்ணுவோம் என இறங்கினோம். அதுதான் ஆடுகளம்.

ஆனால் வெற்றிமாறனால், வடசென்னை கதையை மறக்கமுடியவில்லை. ஒவ்வொருமுறையும் அதைப் பற்றியே பேசிக்கொண்டே இருந்தார். பிறகு திடீரென்று ஒருநாள், இந்தப் படத்தை வைத்து சிம்புவை வைத்துப் பண்ணுகிறேன் என்றார். நல்லவிஷயம். நல்லாருக்கும் என்றேன். இதன் பிறகு, ஒருநாள் என்னிடம், ‘இந்தப் படத்துல முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் ரோல் ஒண்ணு இருக்கு. படத்துல நாப்பது நிமிஷம் வர்ற இந்தக் கேரக்டர்தான் வடசென்னையின் பலமே. நடிக்கலாமான்னு என்னைக் கேட்டார். சிம்புவுக்கு வில்லன் கேரக்டர். எனக்கு பெருந்தன்மை உண்டு. ஆனா அந்த அளவுக்கு பெருந்தன்மை இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

பிறகு ஒருநாள் வந்து, நாமே பண்ணுவோம் என்று பேச்சு வந்தது. அதன் பிறகு நின்றது. அப்போது வெற்றிமாறன், ‘நடுவுல நான் ஒரு படம் பண்ணிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டுப் போனார். அதுதான் விசாரணை.

ஆக, அப்படி இப்படி என்று சுற்றிச்சுற்றி கடைசியில் என்னிடமே வடசென்னை வந்திருக்கிறது. அதேபோலத்தான் ஐஸ்வர்யா ராஜேஷை, ஆரம்பத்தில் முடிவு செய்தோம். பிறகு ஒவ்வொருவராக மாற்றி, கடைசியில் அவர்தான் நடிக்கிறார். ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதியிருக்கும் என்பது மாதிரி, வடசென்னையில் எங்கள் பெயர் எழுதியிருக்கிறது போல!

இவ்வாறு தனுஷ் பேசினார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close