[X] Close

பிக்பாஸ் சுஜாவுக்கு கல்யாணம் - சுஜா பிறந்தநாளில் ‘கல்யாணத்தேதி’ பரிசு


biggboss-suja-marriage

பிக்பாஸ் சுஜா - காதலர் சிவக்குமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Oct, 2018 14:09 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பிக்பாஸ் சுஜாவுக்கு இன்று 11.10.18 பிறந்தநாள். இந்தநாளில், சுஜாவின் காதலர், நவம்பர் 19ம் தேதி, எனக்கும் சுஜாவுக்கும் திருமணம் என்று தகவல் தெரிவித்துள்ளார். 11 வருட காதலிக்கு, இந்தக் கல்யாணத்தேதியையே பிறந்தநாள் பரிசாகத் தந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 1ல் இருந்தவர்களில், சுஜாவும் ஒருவர். கிடாரி முதலான பல படங்களில் நடித்திருக்கிறார் சுஜா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டில் இருந்த சுஜா, மிகவும் பாப்புலரானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, அப்பாவைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அழுதுவிட்டார் சுஜா. அப்போது அவர், ‘அப்பா எங்கவீட்டுக்கு வரணும். அவருக்கு நான் சாப்பாடு போடணும்’ என்றார். உடனே கமல், ‘அப்பா வர்றாரா பாருங்க. வரலேன்னா, அப்பா ஸ்தானத்துல நான் வரேன். வந்து சாப்பிடுறேன்’ என்று சொல்ல, நெகிழ்ந்து போனார் சுஜா.

சமீபத்தில், பிக்பாஸ் 2 வீட்டுக்குக் கூட சுஜா வந்திருந்தார். இந்தநிலையில், சுஜாவுக்கு இன்று 11.10.18 வியாழக்கிழமை பிறந்தநாள்.

இந்தநாளில், சுஜாவின் காதலர் சிவக்குமார், தன் டிவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளார்.

‘11 வருடக் காதல், இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்தப் பிறந்தநாளில், இந்தத் தகவலைச் சொல்லிக்கொள்கிறேன்.

சாகும்வரைக்கும் பிரியாமல், அன்புடன் இருப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு சுஜா, ‘வெக்கமா இருக்கு அத்தான். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியானவள் நானாகத்தான் இருப்பேன். நன்றி’ என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக பதிலளித்துள்ளார் சுஜா.

சுஜாவின் காதலர் சிவக்குமார், நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் பேரன் என்கிறார்கள்.

வாழ்த்துகள்... வாழ்த்துகள். பிறந்தநாளுக்கும் திருமணத்துக்கும்!

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close