[X] Close

தக்‌ஷா அணி வெற்றி சான்றிதழுடன் அஜித்


anna-varsity-vc-praises-ajithkumar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Oct, 2018 10:50 am
  • அ+ அ-

ஆளில்லா விமான வடிவமைப்பில் உதவியாக இருந்த நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். தக்‌ஷா அணி வெற்றிச் சான்றிதழுடன் அஜித் காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டியில் நடிகர் அஜித் ஆலோசகராக இருந்த சென்னை எம்.ஐ.டி.யின் தக்‌ஷா அணிக்கு 2-வது இடம் கிடைத்தது. 8 அணிகள் கலந்து கொண்ட இறுதிச் சுற்றில் தக்‌ஷா அணி 2-வது இடம் பிடித்தது.

நடிகர் அஜித், ரேஸ் கார் இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமே ஊரறிந்த விஷயமாக இருந்த நிலையில் அண்மையில்தான் அவர் ஏரோ மாடலிங் (aero-modelling) தயாரிப்புகளில் ஆர்வம் கொண்டவர் என்பது தெரியவந்தது. 

பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கடந்த மே மாதம் எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் அஜித் இணைந்தார்.  அவரது மேற்பார்வையில்  தக்‌ஷா அணியினர் அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கினர். கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்‌ஷா அணி முதல் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த UAVMedicalExpress2018  போட்டியில் இறுதிச் சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் அஜித்தின் தக்‌ஷா அணி 2-வது இடம் பிடித்திருந்தது. இந்தக் குழுவுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் அஜித்துக்கு அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close