[X] Close

தனுஷுடன் ‘லேடி தனுஷ்’ – ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதம்


vadachennai-iswarya

ஐஸ்வர்யா ராஜேஷ்

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 20:29 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இயக்குநர் பாண்டிராஜ் என்னை லேடி தனுஷ் என்று பாராட்டினார். இப்போது தனுஷுடன் வடசென்னையில் பத்மா எனும் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த பத்மா பேசப்படுவாள் என்று வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.

நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் வடசென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, பவன் முதலானோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:

2012ம் ஆண்டு, காக்கமுட்டை படத்தில் நடிப்பதற்கு என்னை ஒப்பந்தம் செய்த தருணமெல்லாம் நினைவுக்கு வருகிறது. இங்கே தனுஷும் வெற்றிமாறன் சாரும் உட்கார்ந்திருப்பது போல அப்போதும் உட்கார்ந்திருந்தார்கள். முதல் படத்திலேயே, அறிமுகப் படத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தவள் நான்.

அப்படி நடித்த பிறகு கூட, நல்ல படங்கள், நிறைய படங்கள் என பிரேக் கிடைத்தது ஆச்சரியம்தான்.

ஆரம்பத்தில் வடசென்னையை எடுத்துக்கொண்டிருந்த போது நான் நடிக்கவில்லை. ஆனால் மிகவும் பிரமாதமான படமாக இருக்கும் போல. நாமும் நடித்தால் நன்றாக இருக்குமே. வெற்றிமாறன் சார், நம்மைக் கூப்பிட்டால் நல்ல வாய்ப்பாக இருக்குமே என்றெல்லாம் நினைத்துக்கொண்டே இருந்தேன். நண்பர்களிடமெல்லாம் புலம்பிக்கொண்டே இருந்தேன். ஆனால் எல்லா கேரக்டருக்கும் செலக்ட் பண்ணிட்டாங்க என்று சொன்னார்கள்.

இந்த நிலையில், திடீரென்று ஒருநாள், வெற்றிமாறன் சார் போன் பண்ணினார். ஒரு கேரக்டர் இருக்கு, பண்றியான்னு கேட்டார். அதுதான் பத்மா கேரக்டர். ரொம்பத் தெளிவான, தைரியமான கேரக்டர்.  தனுஷ் சாருடன் சேர்ந்து நடிப்பது என்பது கூடுதல் சந்தோஷம்.

உண்மையில் தனுஷ், இந்தியா முழுவதுக்குமான நடிகர். அப்படியொரு நடிப்பாற்றல் கொண்டவர் தனுஷ்.  நான் நடித்த கனா பட ஆடியோ விழாவின் போது, இயக்குநர் பாண்டிராஜ், என்னைப் பற்றி பேசும்போது, லேடி தனுஷ் என்று குறிப்பிட்டுப் பாராட்டினார். அதுவே எனக்கு பெருமையாக இருந்தது. இப்போது வடசென்னை மாதிரியான சிறப்பான படத்தில், அவருடனே நடிக்கிறேன். பத்மா கேரக்டர் பேசப்படும்.

ஆனால், இந்த நிமிடம் வரை, வடசென்னை கதை முழுவதுமாக எனக்குத் தெரியாது. நானும் எல்லோரைப் போல படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன். 

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close