இந்திய குறும்படங்களுக்கு கேன்ஸில் விருது


கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியாவைச் சேர்ந்த சிதானந்தா எஸ் நாயக் இயக்கியுள்ள, சன்பிளவர்ஸ் வேர் த பர்ஸ்ட் ஒன்ஸ் டு நோ (Sunflowers Were the First Ones to Know) என்ற குறும்படம் முதல் பரிசையும் இந்தியாவின் மீரட்டைச் சேர்ந்த மன்சி மகேஷ்வரியின் ‘பன்னிஹுட்’ (Bunnyhood) என்ற குறும்படம் 3-வது பரிசையும் வென்றுள்ளது.

முதல் பரிசுக்கு, 15 ஆயிரம் யூரோக்களும் மூன்றாவது பரிசுக்கு 7,500 யூரோக்களும் வழங்கப்படும்.