#VijayInKerala: சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா... விஜயின் காரை டேமேஜ் செய்த ரசிகர்கள்!


நடிகர் விஜய்

நடிகர் விஜய் 'GOAT' படப்பிடிப்பிற்காக இன்று கேரளா சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். அவரை பார்க்கக்கூடிய கூட்டத்தில் அவருடைய காரை ரசிகர்கள் டேமேஜ் ஆக்கி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வரக்கூடிய 'GOAT' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் இன்று மாலை திருவனந்தபுரம் சென்றார் . அவருடைய வருகைக்காக ரசிகர்கள் மதியத்திலிருந்து விமான நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்தனர். மாலை 5 மணியளவில் நடிகர் விஜய் வந்ததும் அவரது காரைச் சுற்றி ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர். அவர்களுக்கு கையசைத்து வணக்கம் சொல்லி நடிகர் விஜய் அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அங்கு கூடி இருந்த கூட்டத்தால் அவருடைய கார் சேதாரமாகியுள்ளது. காரின் கண்ணாடி உடைந்தது, கதவுகள் நசுங்கியிருப்பது என விஜய் வந்துள்ள கார் சேதமாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

நடிகர் விஜய்

ரசிகர்கள் காரின் மீது ஏறி 'தளபதி, அண்ணா' என்று ஆர்ப்பரித்துள்ளனர். இதனால், விஜய் வந்துள்ள கார் மொத்தமாக சேதாரமாகி இருக்கிறது. தமிழகத்தை அடுத்து கேரளாவில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்போது அவர் தமிழக வெற்றிக் கழகம் என கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் கட்சி வலுப்படுத்த சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இப்பொழுது படப்பிடிப்பும் கேரளாவில் அமைந்திருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள ரசிகர்களை சந்தித்துள்ளார். 'GOAT' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டைவேடத்தில் நடித்துள்ளார். த்ரிஷா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

x