இலக்கை அடைய ஓராண்டு... சிக்ஸ் பேக் போட்டோக்களை பதிவிட்டு நெகிழ்ந்த ஆர்யா!


ஆர்யா

’மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியுள்ள ஆர்யா, அந்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை, காதல், ஆக் ஷன் என அனைத்து ஜானரிலும் நடித்து வருபவர் ஆர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் உடம்பை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்கில் காட்சி அளித்தார் ஆர்யா. அப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு பெரிய லிஃப்ட்டையும் கொடுத்தது. அதன்பிறகு கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் ஆர்யா. இந்நிலையில், கெளதம் வாசுதேவ் மேனன் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கத்தில், ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆர்யா.

ஆர்யா

இப்படத்தில் ஆர்யா உடன் சரத்குமார், மஞ்சு வாரியர், கவுதம் கார்த்திக், அனேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக் ஷன் டிராமாவாக உருவாகி வரும் இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு ஆர்யா மாற்றியுள்ளார். இதற்காக ஜிம்மில் கடுமையாக வொர்க்அவுட் செய்து உடம்பை முறுக்கேற்றியுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல் பருமனாக இருந்த போது எடுத்த போட்டோவையும் தற்போது சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் இருக்கும் போட்டோவையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் கதையை கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி செய்தேன். ஏப்ரல் மாதம் முதல் படத்தின் வேலைகள் ஆரம்பித்துவிட்டோம். செப்டம்பரில் ஷூட்டிங் சென்று விட்டோம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இப்படத்திறாக ஓராண்டாக பணிபுரிந்து வருகிறோம். என்னுடைய இலக்கை அடைய ஒரு வருடம் ஆகி இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார் ஆர்யா.

அவர் பதிவிட்டிருக்கும் போட்டோக்களுக்கு லைக்குகளை குவித்து வரும் ஆர்யா ரசிகர்கள், ‘இதுவல்லவா மாற்றம்... உழைப்பு’ என்று பாராட்டி வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்தும் ஆர்யா, அடுத்து ’சார்பட்டா பரம்பரை 2’ படத்திலும் நடிக்க உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

x