ஜெயம் ரவி மனைவியை சந்திக்க அனுமதிக்காத பிரபல பாடகி: குடும்பத்தில் வெடித்த பிரச்சினை


சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயத்தில் பிரபல பாடகி ஒருவரின் பெயரும் அடிபடுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் ஜெயம் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆர்த்தி ரவி, ‘இது தன்னை கேட்காமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவால் தானும் தனது குழந்தைகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும்’ கூறினார்.

இந்த நிலையில், பிரபல பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம்தான் இந்த விவாகரத்து பிரச்சினைக்குப் பின்னால் உள்ள காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் பிரபல பாடகி கெனிஷா. ஜெயம் ரவியின் தீவிர ரசிகையான இவரின் ’டெஃப் பிராக்ஸ்’ என்ற ஆல்பத்தை ஜெயம் ரவிதான் வெளியிட்டார். கோவாவில் ஜெயம் ரவியுடன் கெனிஷா ஒரு மாதம் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாது, இருவரும் ஒரே காரை ஓட்டி சென்று அபராதமும் கட்டி இருக்கிறார்கள்.

கோவா மட்டுமல்லாது, பெங்களூருவிலும் சில நாட்கள் இருவரும் ஒன்றாகத் தங்கி இருக்கிறார்கள். கோவாவில் ஜெயம் ரவியை ஆர்த்தி சந்திக்க சென்றபோது கெனிஷா அனுமதிக்காததால் பிரச்சினை ஆகி இருக்கிறது. இந்த விஷயங்கள் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கி இருக்கிறது. இதுபற்றி ஜெயம் ரவி விரைவில் மெளனம் கலைப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

x