ஜிவி பிரகாஷ் பட நடிகைக்கு பாலிவுட் நடிகருடன் திருமணம்... சூப்பர் புகைப்படங்கள்!


கிருத்தி கார்பன்டா-புல்கிட் சாம்ராட்

டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் கலக்கிய நடிகை கிருத்தி கார்பன்டாவுக்கும் பாலிவுட் நடிகர் புல்கிட் சாம்ராட்டுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

பரினிதி சோப்ரா, மீரா சோப்ரா, ரகுல் ப்ரீத் சிங் என பாலிவுட்டில் வெட்டிங் சீசன் களைக் கட்டி இருக்கிறது. இந்த வரிசையில் நடிகர்கள் கிருத்தி கார்பன்டாவுக்கும், புல்கிட் சாம்ராட்டுக்கும் நேற்று குர்கானில் திருமணம் நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். கிருத்தி தமிழில் ஜிவி பிரகாஷூடன் ‘புரூஸ்லி’ என்றப் படத்தில் நடித்தவர். அதேபோல, புல்கிட் சாம்ராட்டுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது திருமணப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள இந்த ஜோடி திருமண உறுதிமொழியாக, ‘என் வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் இனி உன்னோடுதான். வாழ்வின் தொடக்கமும் முடிவும் நீதான்.

கிருத்தி கார்பன்டா-புல்கிட் சாம்ராட்

நம் இதயத்துடிப்பு வேறாக இருக்கலாம். ஆனால், அது எப்போதும் உன் பெயரைத்தான் உச்சரிக்கும்’ எனக் கூறியுள்ளனர்.

'பகல்பந்தி' என்ற படத்தில் நடித்தபோதுதான் இந்த ஜோடிக்கு இடையில் காதல் மலர்ந்தது. இவர்களது திருமணப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

x