சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் பற்றிய அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.
’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ’வேட்டையன்’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு புரோமோஷன் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அதன்படி, நடிகை ரித்திகா சிங் அதிரடி காட்டும் போலீஸ் அதிகாரியாக ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை துஷாரா விஜயன் தைரியமான டீச்சராக சரண்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ‘வேட்டைய’னின் ஆன்மா, இதயம் என்ற கேப்ஷனோடு நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திர பெயர் தாரா. படத்தில் இருந்து ரஜினி மற்றும் அமிதாப்பச்சனுடனான மஞ்சு வாரியரின் சில காட்சிகளையும் ‘மனசிலாயோ...’ பாடலில் மஞ்சு வாரியரின் துள்ளலான நடனத்தின் கிளிம்ப்ஸையும் இந்த வீடியோவில் இணைத்துள்ளனர்.