இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்... `தளபதி68’ல் விஜய்க்கு தங்கச்சி இவர்தானாம்!


தளபதி68 பட பூஜையில் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் விஜய்

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், விஜய்க்கு தங்கச்சியாகும் நடிகை குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ‘லியோ’ படத்தை அடுத்து தற்போது தனது 68வது படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘தளபதி 68’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிநேகா, ஷ்யாம், லைலா, மோகன் என தொண்ணூறுகளின் நடிகர்கள் பலர் நடிப்பதால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது.

முக்கியமான ஆக்‌ஷன் காட்சி அங்கு படமாக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இப்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து வருகிறது என்ற அப்டேட்டை வெங்கட்பிரபு கொடுத்தார். நடிகர் விஜய் படம் என்றாலே அதில் தங்கச்சி சென்டிமென்ட் நிச்சயம் இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். ‘லியோ’ படத்தில் மடோனா செபாஸ்டின் நடித்திருந்தார்.

இவானா

‘தளபதி 68’ படத்தில் யார் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்க, அது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ‘லவ் டுடே’ புகழ் இவானாதான் தங்கச்சியாக நடிக்கிறாராம். இதுகுறித்தான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

x