ஷங்கருடன் தம் கட்டும் அட்லி... இவ்வளவு பில்டப் ஆகாது தம்பி! கலாய்க்கும் ரசிகர்கள்!


நடிகர் ஷாருக்கான்

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சர்வதேச அளவில் பிரபலமான அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர்கள் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் ஆறு ஆக்சன் இயக்குநர்கள் பணியாற்றியுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ’ஜவான்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படத்தில் இருந்து முதல் பாடலான ஜிண்டா பண்டா வெளியானது. இந்தப் பாடலுக்காக மட்டுமே கிட்டத்தட்ட 15 கோடி செலவு செய்திருக்கிறார் அட்லி.

இப்போது, படத்தின் சண்டை காட்சிகளுக்காக சர்வதேச அளவில் பிரபலமான ஆறு சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ஸ்பிரோ ரஸாடோஸ், யானிக் பென், கிரேக் மெக்ரே, கெச்சா காம்பக்டீ, சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் அனல் அரசு ஆகியோர் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

’ஜவான்’ படத்தின் ஆக்‌ஷன் இயக்குநர்கள்...

இதில் கைகளால் தாக்கிக் கொள்ளும் சண்டைக் காட்சி, உற்சாகமூட்டும் பைக் காட்சிகள், இதயத்தை தடதக்க செய்யும் டிரக் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் என பல வகையான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது.

’பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என தன் குரு இயக்குநர் ஷங்கருக்கு சவால் விடும் விதமாகவே அட்லி இதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறாரா? எப்படியும் ‘ஜவான்’ ஏதாவது ஒரு படத்தின் காப்பியாக தான் இருக்கப் போகிறது. அதற்கு ஏன் இவ்வளவு பில்டப்’ என ரசிகர்கள் அட்லியைக் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

x