’வடிவேலுவின் அந்த ஒரு ஸீன்... 20 வருஷம் காத்திருந்தேன்... மேடையில் உருகிய ஏ.ஆர்.ரஹ்மான்!


’மாமன்னன்’ விழா மேடையில் ஏ.ஆர். ரஹ்மான்...

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் 50 நாட்களை கடந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடந்தது.

விழாவில் படத்தின் இசையமைப்பாளரான , “’மாமன்னன்’ திரைப்படம் எனக்குள் 20, 30 வருடமாக இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று. என்னால் அதை இசையால் செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தில் என் இசையால் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால், அதை யார் செய்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து விட்டேன்.

’மாமன்னன்’ விழா மேடையில் ஏ.ஆர். ரஹ்மான்...

வடிவேலு, உதயநிதியுடன் பைக்கில் வருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அவர் கண்களில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். அந்த காட்சியை பார்த்த பின்பு தான் இந்த படத்தை மிக மிக சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்தேன்” என உருக்கமாக பேசினார்.

x