’ஜெயிலர்’ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
பான் இந்தியா படமாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கேரளா, கர்நாடகாவிலும் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘பொன்னியின் செல்வன்’, ‘2.0’, ‘விக்ரம்’ படங்களின் வரிசையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர்’ இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.