நான் நம்பவே இல்லை... தமிழக அரசு விருது பெற்ற நடிகர் சிங்கம்புலி நெகிழ்ச்சி!


தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் திரைக்கலைஞர்களுக்கு 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்ட திரைக்கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படத்தின் வெற்றி என்பதைத் தாண்டி விருதுகளும் அங்கீகாரமும் எப்போதும் திரைக்கலைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, அரசு தங்கள் திறமையை அங்கீகரித்து விருது கொடுக்கிறது என்பது திரைக்கலைஞர்களுக்கு உற்சாக டானிக். அந்த வகையில் தமிழக அரசின் திரைப்படம் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகாவும், ‘வை ராஜா வை’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை கெளதம் கார்த்திக்கும் பெற்றனர். ‘இறுதிச்சுற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கரா பெற்றார். ’பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளராக ஜிப்ரான் தேர்வானார்.

சிறந்த நடிகை ஜோதிகா...

’36 வயதினிலே’ படத்திற்காக நகைச்சுவை நடிகை விருதை தேவதர்ஷினி பெற்றார். அதேபோல, ‘அஞ்சிக்கு ஒன்னு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை சிங்கம்புலி பெற்றார். விருது பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் நெகிழ்ச்சியாகப் பேசினார்.

அப்போது “உதவி இயக்குநர், இயக்குநர் என நிறைய விஷயங்கள் செய்துவிட்டேன். 125 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறேன். ஆனால், ’தேசிங்கு ராஜா’, ‘மனம் கொத்தி பறவை’ படங்களைத் தாண்டி மற்றப் படங்களில் நான் நடித்திருக்கும் சில காட்சிகளை மட்டுமே குறிப்பிட்டு பாராட்டுவார்கள். ஆனால், இப்போது நான் விருது வாங்கியிருக்கும் ‘அஞ்சுக்கு ஒன்னு’ அப்படி கிடையாது.

சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்...

சிறு பட்ஜெட்டில் தயாரித்து வெளியான படம். இதுவரை நான் தமிழக அரசின் விருது வாங்கியதில்லை. விருது எனக்குக் கொடுத்திருக்கிறார்கள் என சொன்னபோது, ’வேறு சிங்கம்புலிக்கு கொடுத்திருக்கப் போகிறார்கள். நன்றாக பாருங்கள் என்று சொன்னேன்’. நான் நம்பவே இல்லை. அரசுக்கு நன்றி. விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். இனிமேல், நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நான் நடிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி இருக்கிறது.

’மாயாண்டி குடும்பத்தார்2’ படத்தின் கதை உருவாகி வருகிறது. அதை இயக்குநர் முறையாக அறிவிப்பார். முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாவது பாகமும் சிறப்பாக வரவேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

x