[X] Close

2000 ஜூனியர் நடிகர்கள், 100 நடனக் கலைஞர்களுடன் ஆடிய அதர்வா


atharva-movie-boomerang-movie-2000-junior-artists

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 12 Mar, 2018 21:11 pm
  • அ+ அ-

2000 ஜூனியர் நடிகர்கள், 100 நடனக் கலைஞர்களுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் அதர்வா.

ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பூமராங்’. மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்க, உபேன் படேல் மற்றும் ‘மேயாத மான்’ இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரதன் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஆர்.கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் ஒரு பாடல் இடம்பெறுகிறது. ரதன் இசையமைக்க, விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்காக, ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக செட் அமைத்துள்ளார் கலை இயக்குநர் ஷிவா யாதவ். 2000 ஜூனியர் நடிகர்கள், 100 நடனக் கலைஞர்கள் இடம்பெறும் இந்தப் பாடலுக்கு, பிருந்தா நடனம் அமைத்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close