ஜெயிலர் ரிலீஸ்... அங்கப் பிரதட்சணம் செய்து, மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!


மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் அங்க பிரதட்சணம் செய்து, மண் சோறு சாப்பிட்டு, படம் வெற்றியடைய வேண்டிக் கொண்டார்.

இயக்குநர் நெல்சன் திலீப் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் ரஜினியுடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் ஹிட் அடித்து, ரீல்ஸ், ஷார்ட் என ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, டிக்கட் முன்பதிவிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவர் வழிபாடு நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன் என்பவர் அங்கப்பிரதட்சணம் செய்து, தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மண் சோறு உண்டனர்.

x