மன்சூர் அலிகானுக்கு ஏன் ரெட் கார்டு கொடுக்கவில்லை... பிரபல பாடகி விளாசல்!


மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா

த்ரிஷாவை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியுள்ள வீடியோ தான் கடந்த இரண்டு நாட்களாக விவாதப் பொருளாக மாறியுள்ளது. மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்குப் திரைத்துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகானோ அலட்சியமாக வேறு யாரோ தன் பேச்சை தவறாக சித்தரித்து பரப்புவதாகவும் இது ஒரு பிரச்சினையே இல்லை எனவும் பேசியது மேலும் சர்ச்சையைக் கூட்டியது.

சின்மயி பதிவு...

இந்த நிலையில், பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதாவது ஒரு யூனியன் ரெட் கார்டு கொடுப்பது, அவரை சங்கத்தில் இருந்து நீக்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என எதாவது செய்வார்கள் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், 2-3 நாட்களாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டும்தான் கூறினார்கள்.

சின்மயி, வைரமுத்து

இதுவே மாறாக என் விவகாரத்தில், பத்ம விருது பெற்ற பாடலாசிரியர் ஒருவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனக் கூறியதற்காக நான் உடனடியாகத் தடை செய்யப்பட்டேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தத் துறையில் பல 'வீரர்கள்' அவரைப் பற்றி பேசியதற்காக என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

மன்சூர் அலிகானின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தங்களது கண்டத்தை மட்டுமே பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x