மணிரத்னம் மனுஷனே இல்லை... என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டார்- புலம்பிய பிரபலம்!


மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’

இயக்குநர் மணி ரத்னம் தனது வாழ்க்கையை நாசம் செய்துவிட்டதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனது பேட்டியில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது தற்போது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’மெளன ராகம்’, ‘நாயகன்’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’ என பல கிளாசிக் ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மணி ரத்னம். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகியது. இப்போது நடிகர் கமல்ஹாசனுடன் ‘தக் லைஃப்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். கமலின் 234வது படமாக உருவாகி வரக்கூடிய இதன் கிளிம்ப்ஸ் கமலின் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில்தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இயக்குநர் மணி ரத்னம் தனது வாழ்க்கையை நாசம் செய்துள்ளதாகப் பேட்டி ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணிக்க நாராயணன்

’ஸ்ரீரங்கத்து தேவதைகள்’, ’அலை ஓசை’, ’வாழ்க்கை’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மாணிக்க நாராயணன். நடிப்பது மட்டுமல்லாது, ’கூலி’, ’மாண்புமிகு மாணவன்’ போன்ற படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பட விஷயத்தை பொறுத்தவரை விஜயை வைத்து நான் படம் எடுத்திருக்கிறேன். இப்போதும் எனக்கு விஜயின் மேல் மரியாதை உண்டு. ஆனால் இன்று நிலைமையே வேறு. அஜித்திடம் சென்று தேதி வேண்டும் என்று யாராலும் பிச்சை எடுக்க முடியாது. அஜித்தைவிட விஜய் ஒரு படி மேல் என்று நான் கூறுவேன்” என்று பேசியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் கார்த்தி - த்ரிஷா

மேலும், அவர் இயக்குநர் மணி ரத்னம் பற்றி குறிப்பிடும்போது, “மணி ரத்னம் என் பெயரை காலி செய்து, என் வாழ்க்கையை நாசமாக்கினார். இவரால் தான் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவரிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பணம் இருக்கும் போது எனக்கு கொடுத்து உதவி செய்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. எனவே என்னை பொறுத்தவரை மணி ரத்தினம் ஒரு மனுஷனே இல்லை.

ஆரம்பத்தில், ‘பொன்னியின் செல்வன் 1’ பாகத்தை நான் ரிலீஸ் செய்வதாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இல்லை என்று சொல்லி விட்டார்கள்” என்று வேதனையோடு பேசியுள்ளார். இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

x