அடுத்த படத்துக்கு தயாராகிறார் ரஜினி... மனசே ரிலாக்ஸ்... இமயமலைப் பயணத்தின் ரகசியம்!


ஜெயிலர் ரஜினி

திரையரங்குகளில் 'ஜெயிலர்’ திருவிழா இப்போதே ஆரம்பமாகி விட்ட நிலையில், சத்தமில்லாமல் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் ரஜினி. அடுத்தடுத்து இன்னும் 10 படங்கள் வரையில் ரஜினியின் ஜாய்ஸில் இருக்கிறது. அதில் 5 படங்களுக்கான ஒப்பந்தங்களும் முடிவு செய்யப்பட்டாயிற்று. அதற்கு மனரீதியாக தயாராகவே இமயமலைப் பயணம் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

”வாழ்நாள் முழுவதும் மனுஷன், அவனுக்குப் பிடிச்சதை செய்துக்கிட்டே இருக்கணும்... ஒருத்தன் வேலைச் செய்யறதை விட்டான்னா... அவன் கெட்டான்” என்று நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது சொல்லி வரும் ரஜினி, அரசியல் பாதை தனக்கும், தன்னுடைய உடல் நலத்திற்கும் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தப்பின், அடுத்தடுத்து படங்களில் நடிப்பது என்பதில் தெளிவாகி விட்டார்.

ரஜினியின் இந்த முடிவை உறுதிப்படுத்துகிற மாதிரி, ‘விக்ரம்’ படத்தின் இமாலய வெற்றி, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற சர்ச்சைகள் எல்லாம் சேர்த்து, ரஜினியை உற்சாகத்துடன் மேலும் படங்களில் தொடர்ந்து நடிக்க வலியுறுத்தியிருக்கின்றன என்கிறார்கள் ரஜினியின் பெங்களூரு நண்பர்கள்.

ஒவ்வொரு முறையும் தன்னோட பட ரிீஸ் சமயங்களில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வது நடிகர் ரஜினியின் வழக்கமாக பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தை பார்த்து விட்டு, பட ரிலீஸூக்கு முன்பாகவே இமயமலைக்கு புறப்படும் ரஜினி.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு eஎற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இமயமலைக்கு பயணிப்பதைத் தவிர்த்து வந்த ரஜினி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இமயமலைக்கு புறப்பட தயாராகி வருகிறார்.

நடிகர் ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றும், அடுத்து 10 படங்களில் ரஜினி நடிப்பார், அதில் 5 படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது என்று சமீபத்தில் ரஜினியின் சகோதரர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x