[X] Close

யாஷிகா வருக வருக; ஐஸ்வர்யா குஷி! 


yashika-balaji

யாஷிகா - ஐஸ்வர்யா - பிக்பாஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Sep, 2018 18:03 pm
  • அ+ அ-

நூறுநாளைத் தாண்டி விட்டது பிக்பாஸ். ஞாயிற்றுக்கிழமையில் முடிக்க முடிவெடுத்திருப்பதால், புதன் கிழமை தொடங்கி ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டித்திருக்கிறார்கள். ஆக பிக்பாஸ் இந்த முறை 105 நாட்கள். கிட்டத்தட்ட, 98 நாட்கள் வரை, பாலாஜியும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்கிறார்கள்.

அப்படி யாஷிகா இருந்தது, ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் அப்படியொரு நட்பை பலமாக்கியிருக்கிறது. கடந்த வாரம் 98வது நாளில், யாஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். உடைந்து அழுதார் ஐஸ்வர்யா. அந்தப் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. யாஷிகாவுக்கும்தான்!

ஆனால் யாஷிகாவிடம் ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. கொஞ்சம் தெளிவாகவும் நிதானமாகவும் இருக்கிறார். கடந்த வாரத்தில் கமலுடன் பேசும்போது, போகிற போக்கில் ஒருவிஷயத்தைச் சொன்னார் நினைவிருக்கிறதா?

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை டியூன் பண்ணுவதிலேயே எனக்கு பலநாட்களாகிவிட்டன. அவளுடைய குழந்தைத்தனத்தைக் கவனித்து, பார்த்துக்கொண்டதில், எனக்குள் இருக்கிற குழந்தைத்தனத்தையே நான் மறந்துபோனேன் என்று கமலிடம் சொல்ல, அந்தப் பேச்சால் வியந்து போனார் கமல். 

இத்தனை தெளிவும் டெடிகேஷனும் இருப்பதால்தானோ என்னவோ... யாஷிகாவை அனுப்பியதற்கு பலரும் வருந்தினார்கள். நடிகை ஸ்ரீப்ரியா கூட கொந்தளித்திருந்தார். நெட்டிசன்களும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டினார்கள். 

சரி... விஷயத்துக்கு வருவோம். இன்றைக்கு பிக்பாஸ் வீட்டுக்கு யாஷிகா வருகிறார். இந்த ஐந்து நாட்களை இப்படியாக ஒருவர் பின் ஒருவராக வந்து கலக்குவார்கள் போல இருக்கிறது. கமல் வந்து சென்ற மறுநாள், வைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். அப்புறம், ஷாரிக்கும் நித்யாவும் வந்தார்கள். இப்போது இன்றைக்கு, பாலாஜியும் யாஷிகாவும் வருகிறார்கள்.

ஷாரிக்கைப் பார்த்து ஐஸ்வர்யா எப்படி ஷாக்கானாரோ, தலைகால் புரியாமல் எப்படித் தவித்து மருகினாரோ, அதேபோல் யாஷிகாவின் வருகையிலும் குதூகலமாகப் போகிறார் ஐஸ்வர்யா. 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close